
🔊To listen to this news in Tamil, Please select the text.
15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற இந்திய சமூகம் ஒட்டுமொத்த ஆதரவைத் வழங்கியதற்கு கைமாறாக அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பிரதி- நிதித்துவம் எங்கே என பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி கேள்வி எழுப்பினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அமைச்சர், இரு துணையமைச்சர்கள் மட்டும் போதுமா என்பதை பிரதமர்தான் கூற வேண்டும்.
இந்தியர்களின் பிரச்சினையை எடுத்துரைத்து தீர்வு காண அமைச்சரவையிலும், அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் நகராட்சி, ஊராட்சி மன்றங்களிலும் இந்திய சமூகத்திற்கு நியாயமான இடமளிக்க வேண்டுமென டாக்டர் ராமசாமி வலியுறுத்தினார்.
இந்தியர்களுக்கு வேலை, வர்த்தகம், கல்வி, சுய தொழில், வங்கிக் கடன் போன்றவற்றில் நிறைவான வாய்ப்பு வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் டாக்டர் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.



