
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தல் பரப்புரையின்போது, மாராங், கோல திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சி ஒவ்வொரு வாக்காளர் குடும்பங்களுக்கும் தலா 500, 1,000 ரிங்கிட் வீதம் பண விநியோகம் செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் இருவர் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பணத்தை போட்டியிடும் வேட்பாளர்கள் தரவில்லை என்றும் பொதுமக்களில் சிலர் மனமுவந்து தந்ததாகவும், அப்படி கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) குறிப்பிட்டார்.
மேலும், அவ்வாறு பணம் கொடுப்பது ஒரு வகை தர்மமே என்றும் அவர் தற்காத்துப் பேசியுள்ளார். ஈகை செய்வதை இறைவன் அனுமதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மாராங் தொகுதில் பாஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது அப்துல் ஹாடி அவாங் என்பது குறிப்பிடத்தக்கது.



