
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை மாறாக அதன் உறுப்பினர்களுக்கே சொந்தமென்று முன்னாள் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
அம்னோ பொதுப் பேரவையில் இரு மேல்மட்டப் பதவிகளுக்கான போட்டியைத் தவிர்க்கும் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை எதிர்த்து, இரு அம்னோ உறுப்பினர்கள் சங்கங்களின் பதிவதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனையடுத்து, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi (புவாட் ஸர்க்காசி) அந்த இருவரையும் கடுமையாகச் சாடி, அதனைத் தூண்டியதாக கைரி ஜமாலுடின் மீது குற்றம் சாட்டினார்.



