32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மாநிலத் தேர்தல் சம்பந்தமாக அதிகாரப்பூர்வ மற்ற பேச்சுவார்த்தை தொடங்கியது

🔥 Views : 13
👁 Reading Now : 44

🔊To listen to this news in Tamil, Please select the text.

இவ்வாண்டு மே மாத வாக்கில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் சம்பந்தமாகப் பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக பிகேஆரின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
திரெங்கானு, கிளந்தான் பிகேஆர் தலைமைத்துவ மன்றத் தலைவர் Nik Nazmi Nik Ahmad (நிக் நஸ்மி நிக் அமாட்) அண்மையில் திரெங்கானு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் Ahmad Said (அமாட் சைட்)டை சந்தித்துப் பேசியதாக ரபிஸி தெரிவித்தார்.
மாநிலத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய சின்னம் போன்றவை பற்றி கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்கள் முடிவு செய்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles