29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

இன, சமய துவேஷத்தை விரைவாகத் தடுக்க நடவடிக்கை அவசியம்

🔥 Views : 5
👁 Reading Now : 48

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜொகூரில் இன, சமய துவேஷம் தலைதூக்கக் கூடாதென்றும் அப்படியே அது தலையெடுத்தால் அமலாக்கத் துறை அதனை தடுக்கும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக் கொண்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் அதில் இனபேதம் அறவே இருக்கக் கூடாதென்றும் அவர் அறிவுறுத்தினார். அம்மாதிரியான நடவடிக்கைகள் நடக்க இடம் கொடுத்தால் மக்களிடையே இன புரிந்துணர்வு, ஒற்றுமை, சகிப்புத் தன்மை நிலவ முடியாது என்று அவர் எச்சரித்தார்.
அண்மையில் ஜோகூர் பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றில் மலாய்க்கார மாணவிகளுக்கு மட்டுமே தேர்வு வழிகாட்டிப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டபோது, மலாய்க்காரர் அல்லாத மாணவிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, சுல்தான் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles