
🔊To listen to this news in Tamil, Please select the text.
போலீஸாரின் சோதனை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வீடியோ பதிவு செய்வதைத் தடுக்க எந்தவொரு சட்டமும் இல்லையென்பதால் அதனைச் செய்வோரைக் போலீஸார் கைது செய்ய முடியாது என முன்னாள் போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசான் குறிப்பிட்டார்.
ஜனவரி 28ஆம் தேதி பினாங்கில் போலீசாரின் சோதனை நடவடிக்கையைப் பதிவு செய்த நால்வரைக் கைது செய்து, தடுத்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட கெப்போங் எம்பி Lim Lip Eng (லிம் லிப் எங்), அது சம்பந்தமாகப் போலீஸார் விளக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், திடீர் சோதனைக்குச் செல்லும் போலீஸார் உடலில் கட்டப்படும் கேமராவைப் பயன்படுத்துவதற்கு நேரம் வந்து விட்டதாக மூசா ஹசான் தெரிவித்தார்.



