
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது புதல்வி நூருல் இஸ்ஸா அன்வாரை பொருளாதார, நிதித்துறை தலைமை ஆலோசகராக நியமித்ததைப் பல தரப்பினரும் குறை கூறி, சாடி வருகின்றனர்.
அது பற்றி பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது, பிரச்சினைகளை உருவாக்கும் இம்மாதிரியான அரசு நியமனங்களைத் தவிர்ப்பதே நல்லது என்று குறிப்பிட்டார்.
நூருல் இஸ்ஸா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல்லின் புதல்வர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
அவ்விரு நியமனங்களும் சம்பளமில்லாதவை என்றாலும், நாட்டில் தகுதியான பலர் இருக்கையில் அந்த நியமனங்கள் அணுக்கமானவர்களுக்குச் சலுகை காட்டும் தோற்றத்தைப் புலப்படுத்துவதாக ரபிஸி சுட்டிக்காட்டினார்.



