
🔊To listen to this news in Tamil, Please select the text.
மஸ்ஜிட் தானா எம்பி Mas Ermieyati Samsudinயின் (மாஸ் எர்மியாத்தி சம்சுடின்) பொதுத்தேர்தலின் வெற்றி செல்லும் என்றும் அவர் தொடர்ந்து அத்தொகுதி எம்பியாக நீடிப்பார் என்றும் மலாக்கா தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அவர் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற காரணத்தினால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தேசிய முன்னணி வேட்பாளர் அப்துல் ஹாக்கிம் அப்துல் வாஹிட் வழக்கைத் தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அன்செல்ம் சார்ல்ஸ் பெர்னாண்டஸ், வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்து, வழக்கின் செலவுத் தொகையை அப்துல் ஹாக்கிம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
அப்துல் ஹாக்கிம் தேர்தல் முடிந்து 21 நாள்களுக்குள் வழக்கைத் தாக்கல் செய்யத் தவறியதால், 1954ஆம் ஆண்டு தேர்தல் சட்டம், பிரிவு 38இன் கீழ், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



