27.1 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

லோ சியூ ஹோங் பிள்ளைகளின் மதமாற்ற வழக்கில் சமய இலாகா தலையிடலாம்

🔥 Views : 13
👁 Reading Now : 66

🔊To listen to this news in Tamil, Please select the text.

தந்தை நாகேஸ்வரன் என்பவரால் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட Siew Hong over (லோ சியூ ஹோங்)கின் இரு பிள்ளைகள் இஸ்லாமியர்கள் என அறிவிக்கக் கோரும் பெர்லிஸ் இஸ்லாமிய மன்றத்தின் வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் பெர்லிஸ் இஸ்லாமைய விவகார மன்றம் ஒரு கட்சிக்காரராகஸ் சேர்த்துக் கொள்ள நீதிபதி Has Zanah (ஹஸ் ஸைனா), See Mee Chun (சீ மீ சுன்), Nazlan Ghazali (நஸ்லான் கஸாலி) ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதியளித்தது.
லோவின் முன்னாள் கணவர் நாகேஸ்வரன் தனது இரு பிள்ளைகளையும் 2020 ஜுல 7ல் பெர்லிஸில் மத மாற்றம் செய்து அவர்களை சமய போதகர் நஸிரா நந்தகுமார் அப்துல்லாவின் பாதுகாப்பில் விட்டுள்ளார்.
2020 மார்ச் 31ஆம் தேதி, அத்தப் பிள்ளைகளின் பாராமரிப்பை உயர்நீதிமன்றம் அவர்களின் தாயார் லோவிடம் ஒப்படைத்தது. 2021 செப்டம்பர் 23ஆம் தேதி லோ விவாகரத்து பெற்றார்.
பிள்ளைகள் பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சட்டத்தில் மதம் மாற்றப்பட்டிருப்பதால், அவர்கள் இன்னமும் இஸ்லாத்தைத் தழுவுவதாகவும் அவர்கள் இஸ்லாமிய இலாகாவின் கீழ் பராமரிப்பில் வைக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய விவகார மன்றம் வழக்கைத் தொடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles