31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மலேசிய குடும்பக் கொள்கையைப் பரப்ப
62.1 மில்லியன் ரிங்கிட் செலவா?

🔥 Views : 6
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

14 மாத காலம் பிரதமராகப் பதவி வகுத்து வந்த இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தமது கொள்கையான ‘மலேசிய குடும்பம்’ எனும் Keluarga Malaysiaவை விளம்பரப்படுத்த 62.1 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் Armizan Mohd Ali (அர்மிஸாம் முகமட் அலி) தெரிவித்தார்.
அதே வேளையில், அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த முஹிடின் யாசின் ஆட்சி செய்த 17 மாதங்களில் பரிவுமிக்க அரசாங்கம் எனும் Kerajaan Prihatin கொள்கையை விளம்பரப்படுத்த வெறும் 181,752 ரிங்கிட்டைச் செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில், ஜனவரி 18ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்திய (மலேசியா மதானி) Malaysia Madani எனும் கொள்கையைப் பிரபலப்படுத்த, ஜனவரி 30 முடிய 489,216 ரிங்கிட்டை செலவிட்டதாக அர்மிஸாம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles