
🔊To listen to this news in Tamil, Please select the text.
மிரி, செமாத்தான் மாவட்ட ரப்பர் தோட்டம் ஒன்றில் காணாமல் போன இரண்டு வயது சிறுவன், 24 மணி நேரத்திற்குப் பின்னர் டேய்சி எனும் மோப்ப நாயின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டான்.
சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தகப்பனாருக்காகத் தனது தாயாருடன் கம்போங் பெரிகி குவாரி குடியிருப்பில் காத்திருந்த அந்தச் சிறுவன், காணாமல் போன பின்னர் லுண்டு தீயணைப்பு, மீட்புப் படையினர் அவனைத் தேடினர்.
முயற்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, மோப்ப நாயின் உதவி நாடப்பட்டது. அடர்ந்த புதர்கள் அடங்கிய ரப்பர் தோட்டத்தில், அச்சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில், மதியம் 1 மணியவில் மோப்ப நாய் கண்டுபிடித்து உதவியது.
சிறுவன் நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்- பட்டுள்ளது.



