
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் கடந்த 6 மாத காலம் கலந்து கொள்ளாமல் இருந்த பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர் பெஜுவாங்கின் Harumaini Omar (ஹருமைனி ஒமாரின்) பதவி காலியானதாகவும் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக சபாநாயகர் Ng Suee Lim (இன் சுயீ லிம்) தெரிவித்தார்.
14ஆவது பொதுத்தேர்தலில் பெர்சத்துவின் ஹருமைனி பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்டு 8,315 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். சில காலத்திற்குப் பின்னர் அவர் பெஜுவாங்கில் இணைந்தார். அவர் 2022 ஜூலை 27ஆம் தேதியிலிருந்து சட்டமன்றதிற்கு வரத் தவறியுள்ளார்.
மார்ச் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்திற்கு அவருக்கு அழைப்பு இல்லையென்றும் இன் சுயீ லிம் தெரிவித்தார்.



