
🔊To listen to this news in Tamil, Please select the text.
உடுத்திய ஆடையைக் காரணம் காட்டி பெண்மணி ஒருவருக்கு சிகிச்சை வழங்க மறுத்த கம்பார் மருத்துவமனை மருத்துவ அதிகாரிக்கு மாநில சுகாதார இலாகா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த மாநில சுகாதார இயக்குநர் Khairul Azha Azam (கைருல் அஸா அஸாம்), அம்மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அரைகுறை ஆடை அணிந்து அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக வருவோருக்கு எவ்விதப் பாகுபாடும் காட்டாமல் சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



