
🔊To listen to this news in Tamil, Please select the text.
வேலை மோசடியில் ஏமாற்றப்பட்ட 121 மலேசியர்கள் இன்னமும் வெளிநாடுகளில் சிக்கியிருப்பதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் லாவோஸ், கம்போடியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தூபாய் ஆகிய நாடுகளில் 339 பேர் இருந்த நிலையில், போலீஸ் துறையின் உதவியோடு அவர்களில் 218 பேர் மீட்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பெரும்பாலோர் மோசடியான விளம்பரத்தினாலும் அதிகச் சம்பளம் பெறும் பேராசையினாலும் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தடுக்க இணையக் குற்றம் சம்பந்தமான சட்டம் வரையப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



