26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தின் வேலையல்ல

🔥 Views : 3
👁 Reading Now : 35

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை விட அதில் தனியாரை ஈடுபடுத்துவதே சரியான வியூகமாக இருக்கும் என முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் Johari Ghani (ஜொஹாரி கனி) சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் கடமையே மக்களுக்கு தேவையான சேவையை வழங்கவே என்றும் அது தனியாரைப் புறந்தள்ளி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியல்லவென அவர் தெரிவித்தார்.
5ஜி தொலைத் தொடர்பை தனியாருக்கு விடாமல் அரசே அதனை நடத்த Digital Nasional Berhad (டிஜிட்டல் நேஷனல் நிறுவனத்தை) அமைத்து அத்திட்டத்தை 2021இல் தொடங்கியது. ஆனால், பல கோடி ரிங்கிட் முதலீடு செய்திருந்தும் அது வெறும் 40 விழுக்காடு சேவையை மட்டுமே அடைந்துள்ளதாக ஜொஹாரி தெரிவித்தார்.
இதில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அவை இத்திட்டத்தில் முழு ஒத்துழைப்பைத் தருமா என்பது சந்தேகமே என்றும் தாய்லாந்தில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அத்திட்டத்தை நாட்டில் செயல்படும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜொஹாரி கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles