
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல்வேறு காரணங்களினால் இவ்வாண்டு உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் 60,000 பேர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக முதலாளிமார் சம்மேளனமான எம்இஎஃப்பின் தலைவர் Said Husein Said Husman (சைட் ஹுசேய்ன் சைட் ஹுஸ்மான்) எச்சரித்துள்ளார்.
நாட்டின் 98 விழுக்காடு சிறு, நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், அவற்றிற்கு பட்ஜெட்டில் முறையான உதவி வழங்கப்படவில்லை என்றால், பலரும் வேலையிழக்கும் அபாயம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
பொருளாதார நலிவினால் மக்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டால் அது நாட்டின் வருவாயைப் பாதிக்கும் என்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
