26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இசிஆர்எல் ரயில் திட்டத்தில் பாதிக்கப்படும் 89 குடும்பத்தினரை சிலாங்கூர் அரசு கைவிடாது

🔥 Views : 2
👁 Reading Now : 47

🔊To listen to this news in Tamil, Please select the text.

கிழக்குக் கரையோர ரயில் திட்டம் கிளந்தானில் இருந்து போர்ட் கிள்ளான் வரை செல்ல திட்டமிட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் Amiruddin Shari (அமிருடின் ஷாரி) தெரிவித்தார்.
பெந்தோங்கிலிருந்து அதன் ஒரு தடமானது 90.72 கிலோ மீட்டர் தூரமான கோம்பாக், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் மற்றும் கிள்ளான் மாவட்டங்களின் வழியாக போர்ட் கிள்ளானை அடையும்.
அந்த ரயில் திட்டம் போர்ட் கிள்ளானை அடைய கம்போங் டெலெக் மற்றும் கம்போங் சுங்கை சீரே ஆகிய கிராமங்களின் ஊடே செல்ல வேண்டியுள்ளது. அதனால் அங்கு வசிக்கும் 89 குடும்பங்களும் 86 இடுகாடுகளும் பாதிக்கப்படும்.
இத்திட்டம் 2025 அல்லது 2026ஆம் ஆண்டில் பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கும் வேளையில், அதில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மாற்று இடம், புது வீடுகள், இழப்பீடும் வழங்கப்படும் என்று அமிருடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles