31.3 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

நான் சந்தேகப் பேர்வழி அல்ல – முஹிடின் யாசின் காட்டம்

🔥 Views : 20
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோவிட் காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு உதவ தொடங்கப்பட்ட ஜானா விபாவா திட்டத்தில் மோசடி நடந்திருக்கும் சந்தேகத்தின் பேரில் தாம் எம்ஏசிசியினால் விசாரணை செய்யப்பட்டதால், தம்மை மோசடிப் பேர்வழியாகச் சித்திரிக்கக் கூடாதென முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.
அது அப்போதைய நிதியமைச்சராக இருந்த தெங்கு ஸப்ருல் பரிந்துரையின் பேரில் தொடங்கப்பட்டதாகவும், அத்திட்டம் இல்லையென்றால் பூமிபுத்ரா குத்தகையாளர்கள் பலர் திவாலாகி இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்திட்டமானது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அமலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். அதில் உதவி பெறும் குத்தகையாளர்களை நிதியமைச்சே தேர்வு செய்ததாகவும் அதில் தமது பங்கு எதுவுமில்லையென்றும் முஹிடின் தெரிவித்தார். அத்திட்டம் சம்பந்தமான கேள்விகளுக்குத் தாம் எம்ஏசிசியிடம் பதில் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles