26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோவிட் நோய் தடுப்புக்கான கொள்முதலில் முறைகேடு என்று கூறுவோர் மீது வழக்கு பாயும்

🔥 Views : 4
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமது பதவி காலத்தில் கோவிட் சிகிச்சைக்கு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசியில் தாம் முறைகேடு செய்ததாக நிந்திப்போருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்றும் முஹிடின் யாசின் எச்சரித்தார்.
தம்மீது தொடர்ச்சியாக நிந்தனையாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் இனியும் தாம் அதனைப் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் அது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அன்வார் இப்ராஹிம், தடுப்பூசி கொள்முதலில் சட்டத்துறைத் தலைவரின் அனுமதியின்றி அது வாங்கப்பட்டிருப்ப தாகவும் அது பற்றி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தமது மருமகனுக்கு பெரும் மதிப்பிலான அரசின் குத்தகைத் திட்டம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை முஹிடின் வன்மையாக மறுத்தார். தாம் எப்போதும் சட்டத்தை மதித்து, அதன்படியே நடப்பதாகவும் கூறியுள்ளார். தாம் அரசின் பணத்தைக் கொள்ளையடிக்கும் திருடன் இல்லையென்றும் உறுதிபடக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles