
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசு கிளினிக்குள் மற்றும் மருத்துவ- மனைகளில் விதிக்கப்படும் கட்டணங்களை அதிகரிக்கும் பரிந்துரை தவிர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் Galen CEO Azrul Mohd (கேலன் செயல்முறை அதிகாரி அஸ்ருல் முகமட் காலிப்) கேட்டுக் கொண்டார்.
தற்போது மலேசியர்களுக்கு 1 ரிங்கிட்டும் மருத்துவ நிபுணர்களைக் காண 5 ரிங்கிட்டும் விதிக்கப்படுகிறது. இத்திட்டம் 80களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு செலவிடும் மருத்துவ செலவினத்திற்கு இது போதுமானதாக இல்லையென்றும் 95 விழுக்காடு கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மருத்துவ செலவினத்தைக் குறைக்க அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நேரம் கனிந்து விட்டதாக அஸ்ருல் தெரிவித்தார்.



