29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

5 லட்சம் மகளிரை காப்புறுதித் திட்டத்தில் ஈடுபடுத்த சொக்சோ திட்டம்

🔥 Views : 4
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

இவ்வாண்டு இறுதிக்குள் மகளிருக்கான சொக்சோவின் சிறப்பு காப்புறுதித் திட்டத்தில் 5 லட்சம் மகளிரை இணைக்க சொக்சோ திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மாதம் 10 ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம், காப்புறுதி செலுத்தும் மகளிருக்கு மருத்துவம், இயலாமை நிதியுதவி, ஓய்வூதியத் திட்டம், நிரந்தர பராமரிப்புச் சலுகை போன்ற சேவைகள் வழங்கப்படும்.
இத்திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்ட பின்னர், இது வரை 174,000 பேர் அதில் இணைந்து சந்தா செலுத்தி வருவதாக சொக்சோ அதிகாரி Rahmat Ismail (ரஹ்மாட் இஸ்மாயில்) தெரிவித்தார்.
55 வயதுக்குட்பட்ட மலேசிய குடும்பப் பெண்கள் இத்திட்டத்தில் இணையலாம் என்றும் அது 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles