
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிறுவர்களுக்கான 30 விழுக்காடு மைகார்டுகளைப் பெற்றோர் அல்லது பாதுகாவர்கள் கோராமல் இருப்பதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution (சைஃபுடின் நசுத்தியோன்) தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மைகார்டுகளைப் பெறாவிட்டால் அவை ரத்து செய்யப்படும் என்பதால் பெற்றோரும் பாதுகாவலர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
உலகளாவிய நிலையில் மைகார்டுக்கான சிப்ஸுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அமைச்சு அதனை நிவர்த்திக்க தக்க நடவடிக்கை எடுத்து வருவதாக செராஸில் குற்றச் செயல்களைத் தடுக்கும் கருத்தரங்கில் உரையாற்றும்போது சைஃபுடின் இவ்வாறு தெரிவித்தார்.



