
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் 7 பேரில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் Zaleha Musthafa (ஸலேஹா முஸ்தாப்பா) தெரிவித்தார்.
ஆய்வு ஒன்றில் 17 லட்சம் பேர் சீரிழிவு, ரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு ஆகிய தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், 34 லட்சம் பேர் நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரு வகை தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலகம் முழுவதும் 85 கோடி பேர் சிறுநீரக பாதிப்பினால் அவதியுறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மக்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதோடு மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸலேஹா கேட்டுக் கொண்டார்



