25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அன்வாரின் அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்

🔥 Views : 2
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்- காரர்களின் ஆதரவு குறைவாக இருக்கும் நிலையைப் பயன்படுத்தி, ஆட்சியைக் கவிழ்க்க பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) முயற்சிப்பதை அன்வார் இப்ராஹிம் உதாசீனம் செய்யக்கூடாது என தாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் James Chin (ஜெம்ஸ் சின்) குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னார், அரசு பதவி, பட்டம், வருமான சுகத்தை அனுபவித்த ஹாடி அவாங், எந்த எல்லைக்கும் சென்று ஆட்சியைக் கவிழ்க்க எல்லா வகையான சூழ்ச்சியையும் செய்ய முனைவார் என்பது நிச்சயம்.
வரும் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான், திரேங்கானு, கெடா மற்றும் மாநிலத் தேர்தல்களில் அன்வாரும் அம்னோவும் மலாய்க்காரர்களின் ஆதரவை மீட்பதில் வெற்றி கண்டால், ஆட்சி கவிழாமல் தப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு குறைவாக இருப்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கான ஆதரவை இன்னும் அதிகரிக்க அன்வார் முயன்றால் இத்தவணை வரை ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என ஜேம்ஸ் சின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles