
🔊To listen to this news in Tamil, Please select the text.
2000ஆம் ஆண்டிலிருந்து இந்தியர்களின் பாரப்பரிய தொழில்துறையான ஜவுளி, நகைக்கடை, முடி திருத்தகம் போன்றவற்றில் ஆள் பற்றாக்குறையால் அத்தொழில்கள் நசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இத்துறைகளில் வேலை செய்ய 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் தேவைப்படுவதாகவும் அரசு வழங்கிய தற்காலிக அனுமதி தங்களுக்கு பலன் அளிக்காது என்பதால் அதனைத் தாங்கள் ஏற்கப் போவதில்லை என்றும் இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்க சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
எனவே, அரசு இந்த விவகாரத்தில் முக்கிய கவனத்தைச் செலுத்தி அந்நியத் தொழிலாளர்களை இத்தொழில் துறைகளுக்கு தருவிக்க விரைவாக அனுமதி தர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



