
🔊To listen to this news in Tamil, Please select the text.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் Armizan Mohd Ali (அர்மிஸான் முகமட் அலி), 10 லட்சத்து 1,002 அரசு ஊழியர்களில் 4.11 (41,117 பேர்) விழுக்காடு இந்தியர்கள் அரசுத் துறைகளில் வேலை செய்வதாகக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
அரசுத் துறைகளில் இந்தியர்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் பதவி உயர்வு வழங்கப்படுவதில் பாரபட்சம் நிலவுவதாகவும் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி இதற்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அரசு வழங்கியிருக்கும் புள்ளி விவரம் சரியானதா என்பதை உறுதிசெய்ய அரசுத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை என்னவென்பதை அரசு அறிவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



