29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கம்போடியா சிறையில் இருக்கும் மகனை மீட்க அரசு உதவ வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமது மகன் ஹேமகவின் (26) என்பவர் 2016ஆம் ஆண்டு தமது 19ஆவது வயதில் கம்போடியாவிற்கு சென்றபோது போதைப்- பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக அவரின் தகப்பனார் கார்த்திகேசு தெரிவித்தார்.
மகனின் காதலியின் தூண்டுதலால் அங்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற மகன், செய்யாத குற்றத்திற்காக சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் மீதான வழக்கு முறையாக நடைபெறவில்லை என்றும் சாட்சிகள், புலனாய்வாளர்கள் ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைக்காமலேயே மகன் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டதாக கார்த்திகேசு தெரிவித்தார்.
அவரை விடுவிக்க பல்வேறு வழிகளில் தாம் முயற்சி எடுத்தாலும் அவை யாவும் பலனளிக்காமல் போனதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமது மகனை அங்கிருந்து விடுவிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் உதவ வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles