
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தமது கட்சி உறுப்பினர்களே என்றும் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் செயலாற்ற தம்மால் முடியும் என்றும் தெரிவித்தார்.
தமது பாகான் டத்தோ தொகுதியில் தமது புதல்வி Nurul Hidayah (நூருல் ஹிடாயா) தோல்வியுற்றிருப்பதைக் குறிப்பிட்ட அவர், தாம் யாரையையும் போட்டியிடவோ அல்லது பின்வாங்கவோ கேட்டுக் கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.
அவருக்கு அணுக்கமானவர்கள் இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி அம்னோ பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.



