
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் அரசு சார்பு நிறுவனங்களிலும் அரசு நிறுவனங்களிலும் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதைச் சாடிய பொருளாதார ஆர்வலர் ரேமன் நவரத்தினம் அது பக்காத்தான் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நியமனங்கள் சிறந்த அரசாங்க நடைமுறைக்கு ஏற்புடையது இல்லையென்றும் அரசியல்வாதிகளை விட்டால் அப்பதவிகளுக்கு வேறு தொழில் சார்ந்த நிபுணர்கள் கிடைக்கவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
முந்தைய ஆட்சியைப் போன்றே இப்போதைய ஆட்சியும் அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பதவிகளை வாரிக் கொடுப்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Asyraf Wajdi Dusuki (அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி) மாராவின் தலைவராகவும் பினாங்கு பிகேஆர் தலைவர் (பக்தியார் வான் சிக்) Bakhtiar Wan Chik MyCreative Ventures (மை கிரியேட்டிவ் வெஞ்சர்ஸின்) தலைவராக நியமிக்கப்பட்டது பலரின் கண்டனத்துக்கு இலக்கானது.



