26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டாக்டர் ராமசாமி மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரம் கட்டப்படலாம்!

🔥 Views : 4
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை எந்த நேரத்திலும் யாருக்கும் அச்சப்படாமல் உரத்த குரலில் பேசிவரும் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
தற்போது ஜசெக ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றாலும் இந்தியர்களுக்கு அரசுத் துறையில் போதுமான வாய்ப்பும் பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை என்றும் தேசிய பள்ளிகளில் தமிழ்மொழி போதனை வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அவரின் குற்றச்சாட்டுகள் அவரது கட்சியின் மேல்மட்டத் தலைவர்களின் பதவிக்கு இடையூறாகவும் பக்காத்தானுக்குப் பாதகமாகவும் இருப்பதால், வரும் மாநிலத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு தரப்படுமா என்பது சந்தேகமே என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles