
🔊To listen to this news in Tamil, Please select the text.
சந்தர்ப்ப வசத்தால் தத்து எடுக்கப்பட்டருக்கு சட்டத்தின்படி இயல்பான குடியுரிமை வழங்க அரசமைப்பு விதி அனுமதிக்கவில்லை என்று நீதிமன்ற ஆணையர் Shamsulbahri Ibrahim (ஷம்சுல் பஹாரி இப்ராஹிம்) தீர்ப்பளித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தெடுக்கப்பட்ட லாவ் ஜுன் குவான்(22) என்பவரும் அவரது பெற்றோரும் அவருக்கு பிறப்புப் பத்திரத்தையும் அடையாளக் கார்டையும் வழங்க வேண்டுமென்று ஜொகூர் உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவின் மீது தீர்ப்பளித்த நீதிபதி, தானியங்க முறையில் அவருக்கு குடியுரிமை வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் நேரடியாகவே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டதோடு, அவருக்கு இயல்பான குடியுரிமை வழங்கப்பட்டால் அது ஆள்கடத்தல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.



