
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசியல்வாதிகளை அரசு சார்பு நிறுவனத் தலைவர்களாக நியமிக்கக் கூடாதென்ற அறைகூவல் விடுக்கப்பட்டாலும், கிளந்தான் மாச்சாங் அம்னோ தலைவர் அமாட் ஜஸ்லான் யாக்கோப் ஃபெல்க்ரா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்திருக்கிறார்.
அவரின் நியமனம் மார்ச் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாகத் தெரிவித்தார். அண்மையில் அவரின் ஆதரவாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி மாராவின் தலைவராகவும் பிகேஆரின் பினாங்கு பிகேஆர் தலைவர் (பக்தியார் வான் சிக்) Bakhtiar Wan Chik MyCreative Ventures (மை கிரியாட்டிவ் வெஞ்சர்ஸின்) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனங்களைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளதாகவும் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.



