
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த ஈராண்டுகளாக கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிந்தாலும் பள்ளித் தவணையை ஜனவரி மாதமே தொடங்க இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் Pkharuddin Ghazali (கைருடின் கஸாலி) தெரிவித்தார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி இவ்வாண்டில் கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் மார்ச் 19ஆம் தேதியும் மற்ற மாநிலங்களில் மறுநாளும் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் தொடங்கிய முதல் வாரத்தில் பாட போதனைகள் நடத்தப்படாமல் நன்னெறிக் கல்வியும் மாணவர்களின் நன்னடத்தையை ஊக்குவிக்கும் பலவிதமான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கேளிக்கை விளையாட்டுகளின் வழி மேற்கொள்ளப்படும்.
பள்ளிப் போட்டிகள், கொண்டாட்ட நிகழ்ச்சிகள், விழாக்கள் யாவும் நடத்தப்படாது என்றும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் பள்ளி அளவில் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



