25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜோ லோவும் அவரது கூட்டாளிகளும் இன்னமும் இண்டர்போலின் தேடலில் உள்ளனர்

🔥 Views : 9
👁 Reading Now : 58

🔊To listen to this news in Tamil, Please select the text.

அனைத்துலக போலீசான இண்டர்போலில் 195 உலக நாடுகள் உறுப்பியம் பெற்றிருந்தாலும் 1எம்டிபி நிதி முறைகேடலில் சம்பந்தப்பட்டு, கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட ஜோ லோவையும் அவரது கூட்டாளிகளையும் தேடி, கைது செய்ய முடியாமல் இருப்பதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் மக்களவையில் தெரிவித்தார்.
அந்த முறைகேடலில் Low (Taek Jho) (ஜோ லோ), Terence Geh Choh Heng (டெரன்ஸ் கே சோ ஹெங்), Casey Tang Keng Chee (கேசி தாங் கெங் சீ) Jasmine Loo (ஜாஸ்மின் லூ) மற்றும் Eric Tan Kim Loong (எரிக் டான் கிம் லூங்) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அவர்கள் அனைவரும் வழக்குகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் இப்போது தஞ்சம் புகுந்துள்ளதாக சைஃபுடின் தெரிவித்தார்.
இந்நிலையில் 1எம்டிபியின் முன்னாள் மேல்மட்ட அதிகாரியான Nik Faizal (நிக் பைசாலின்) மீதான எம்ஏசிசியின் விசாரணை இன்னமும் தொடர்வதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles