
🔊To listen to this news in Tamil, Please select the text.
1987 அக்டோபர் 27ஆம் தேதி 106க்கும் அதிகமான அரசியல்வாதிகள், கல்விமான்கள், அரசு சார்பற்ற தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் வழி கைது செய்யப்பட்டதில் தாம் சம்பந்தப்படவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டு தப்பிக்க நினைக்கிறார்.
அது போலீஸாரின் முடிவு என்றும், நாட்டின் அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போலீஸ் துறையே அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மகாதீர் கூறி இருப்பது வடி கட்டிய பொய் என்றும், ஒரு பிரதமருக்குத் தெரியாமல் அவரின் அனுமதியின்றி போலீஸ் துறை அந்த நடவடிக்கையை மேற் கொண்டதாகக் கூறுவது மக்களை ஏமாளிகள் என நினைத்தே அவர் ஏமாற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துரைத்துள்ளனர்.
தமது காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் பயன்படுத்தி மகாதீர் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த நிலையில், அவர் அன்வார் இப்ராஹிமை சர்வாதிகாரியாகக் கூறுவது நகைப்பைத் தருவதாக நஜிப் குறிப்பிட்டிருந்தார்.



