26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சிகிச்சை பெற நஜிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

🔥 Views : 3
👁 Reading Now : 36
Former Malaysian Prime Minister Najib Razak arrives at Court of Appeal in Putrajaya, Malaysia April 5, 2021. REUTERS/ Lim Huey Teng

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குச் செல்ல சிறைத் துறை அனுமதித்துள்ளதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution (சைஃபுடின் நசுத்தியோன்) தெரிவித்தார்.
சிறையில் இருக்கும் எந்தக் கைதியும் முறையான சிகிச்சை பெற இம்மாதிரியான அனுமதி அளிக்கப்படுவது இயல்பான நடவடிக்கை என்றும் அதற்கு சிறைத் துறையே நடவடிக்கை எடுக்கும் என்று சைஃபுடின் தெரிவித்தார்.
அமைச்சின் ஊழியர்களிடையே உரையாற்றிய அவர், சிறையிலிருந்து வெளியேறிய 800 கைதிகளில் ஒருவர் மட்டுமே மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகப் புள்ளி விவரம் குறிப்பிடுவதாகவும் முன்னாள் கைதிகளுக்கு பனாசோனிக், எம்ஆர்டி, திடக் கழிவு மேலாண்மை நிறுவனம் போன்றவற்றில் வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles