26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

குடியுரிமை விவகாரத்தில் நீதிமன்றம்
தவறிழைத்து விட்டது

🔥 Views : 2
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய மாதர்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு இயல்பான குடியுரிமையை மறுத்த மேல் முறையீட்டு நீதிமன்றம் நீதி பரிபாலனத்தில் தவறிழைத்து விட்டதாக அந்த வழக்குகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் 6 மாதர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முன் அமைதிப் போராட்டத்தை நடத்தினர்.
முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி மாதர்களுக்கு, தந்தையர்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை போன்ற உரிமையை தாய்மார்களுக்கும் உள்ளதாகக் குறிப்பிட்ட நிலையில், மாதர்களுக்கு அந்த உரிமை இல்லையென்றும் அந்தச் சட்டத்தில் தந்தையருக்கு மட்டுமே பெற்றோர் என்று அங்கீகாரம் தரப்பட்டுள்ளதாக இரு நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.
இது சட்டத்தை மேலோட்டமாக அணுகியதால் வந்த அநியாயம் என்றும் இது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு என்றும் விமர்சித்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பினை கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல 6 மாதர்களும் உயர்நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரி வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
‘ இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அக்தார் தாஹிர் தந்தையரைப் போலவே தாய்மார்களும் சரி சமமான உரிமையைப் பெற்றிருப்பதாகத் தீர்ப்பளித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles