25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சவூதி அரேபியாவுக்குச் சென்ற அன்வார் பட்டத்திளவரசரை சந்திக்க இயலவில்லை

🔥 Views : 3
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

சவூதி அரேபியாவின் பட்டத்திளவரசர் Muhammad Bin Salman (முகமட் பின் சல்மானின்) அழைப்பின் பேரில் அண்மையில் அந்நாட்டுக்குச் சென்ற பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு அங்கு தகுந்த மரியாதை தரப்படவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.
அங்கு சென்ற அன்வாரை வரவேற்கவும் அந்நாட்டின் சார்பில் வழங்கப்பட்ட விருந்துபசரிப்பில் பட்டத்திளவரசர் முகமட் பின் சல்மான் கலந்து கொள்ளாததும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
வேறு பணிகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் முகமட் பின் சல்மான் தமது பணி அட்டவணையை மாற்ற நேர்ந்ததாகச் சொல்லப்பட்டது.
சவூதிக்கு மிகவும் நட்பு நாடாக விளங்கும் மலேசியாவை புறக்கணித்தற்கு பதில் சொல்ல சவூதிக்கான மலேசிய தூதர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
2021இல் சவூதிக்கு சென்ற முன்னாள் பிரதமர் முஹிடின் யாசினுக்கு முகமட் சல்மான் ஜெட்டா விமான நிலையத்திற்கே வந்து வரவேற்பு தந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles