25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பினாங்கு மாநிலத் தேர்தலில் தமக்கு இடமில்லை என்ற செய்தியில் உண்மையில்லை

🔥 Views : 2
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக 3 தவணைகளாக பதவி வகிப்பதோடு, அம்மாநில துணை முதல்வராகவும் இருக்கும் டாக்டர் பி. ராமசாமிக்கு வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படாது என்ற செய்தியில் சிறிதளவு உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத் தேர்தல் பட்டியலை இன்னும் தயாரிக்கவில்லை என்பதால், தாம் இன்னும் ஒரு தவணைக்கு சேவை வழங்க வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கோரியிருப்பதாகாவும் தமது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தாம் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.
பல சமூக பிரச்சினைகள் குறித்து தாம் குரல் எழுப்பி வந்துள்ளதால் தாம் ஒற்றுமை அரசாங்கத்தையும் ஜசெகவையும் எதிர்த்து வருவதாகப் பொருள்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய சமூகம் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர தாம் இதுகாறும் தன்னலமற்ற சேவையை வழங்கி இருப்பதால், தமது சேவையை அங்கீகரிக்கும் வகையில் மேலுமொரு தவணை வழங்கப்படுவது நியாயமே என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles