
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூரை 3 தேர்தல்களில் கைப்பற்றி ஆட்சி செய்துவரும் பக்காத்தான் ஹராப்பான் இம்முறை கடுமையான போட்டியை எதிர்நோக்க வேண்டிவரும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
15ஆவது பொதுத்தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரில் தஞ்சோங் காராங், உலு சிலாங்கூர், காப்பார் போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால், மாநிலத் தேர்தல்களில் அது பக்காத்தானுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய இளம் வாக்காளர்கள் பெரிக்காத்தானுக்கு பெரும் ஆதரவாக இருப்பதால், மாநிலத் தேர்தலில் பக்காத்தான் சிலாங்கூரை மீண்டும் வெற்றி கொள்ள கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, பக்காத்தான் இன்னும் கடுமையாக உழைப்பதோடு வெற்றியை உறுதி செய்ய. மலாய் சார்பு ஆதரவுக் கட்சியின் உதவியை நாடிப் பெறுவது மிகவும் அவசியம் என கருத்துரைக்கப்படுகிறது.



