
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த இரு தேர்தல்களில் கெராக்கான் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றி பெறத் தவறியிருந்தாலும் அது இன்னமும் மக்களுக்குச் சேவை வழங்குவதில் உகந்த கட்சியாகவே உள்ளதாக அதன் தலைவர் டாக்டர் Dominic Law (டோமினிக் லாவ்) தெரிமித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் கெராக்கான் எந்தவொரு தொகுதியையும் வெற்றி கொள்ள முடியாமல் போனதால், அதனைக் களைத்து விட்டு அதன் உறுப்பினர்கள் மற்ற கட்சிகளில் இணைய வேண்டுமென ஜசெக தலைமைச் செயலாளர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) குறிப்பிட்டதைச் சாடிய அவர், ஜசெகவைப் போலல்லாமல் கெராக்கான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜசெக ஒவ்வொரு தேர்தலிலும் பொய்யையே அவிழ்த்து விட்டு, வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான வெற்றியைப் பெற்றது போல கெராக்கானின் செயல் இல்லையென டோமினிக் லாவ் தெரிவித்தார்.
1969லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பினாங்கை ஆட்சி செய்து மசீசவுக்கு இணையாக கெராக்கான் விளங்கியது. ஆயினும், 2018ஆம் ஆண்டு தேர்தலில் அது படுதோல்வி அடைந்த பின்னர், தேசிய முன்னணியில் இருந்து விலகி, பின்னர் 2021இல் அது பெரிக்காத்தானில் இணைந்தது.



