
🔊To listen to this news in Tamil, Please select the text.
2018ஆம் ஆண்டிலிருந்து 6,036 மருத்துவர்கள், 890 மருத்துவ நிபணர்கள், 1,651 மருந்தியலாளர்களும் அரசுப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக சுகாதார துணையமைச்சர் Lukanisman Awang Sauni லுக்கினிஸ்மான் அவாங் சவுனி மேலவையில் தெரிவித்தார்.
தனியார், அரசின் நிறுவனத் துறையில் சேர்வது, சொந்த கிளினிக்குகளைத் திறப்பது, பொது மற்றும் தனியார் கல்விக் கழகங்களில் விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவதல், பாதகமான வேலைச் சூழல், வேலைப் பளு மற்றும் பகடிவதை போன்றவை அதற்குக் காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து, மேல் கல்வியைத் தொடர்வது, உடல் நலம் குன்றியது, வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வது மற்றும் சொந்தக் காரணங்களும் அதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவற்றைக் களைந்து மருத்துவர்கள் அரசு சேவையிலிருந்து அகலாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



