
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு ஜுலையிலிருந்து அடுத்தாண்டு வரை நாட்டில் எல்-நினோ பருவ நிலை மாற்றத்தால் கடுமையான வறட்சியும் தண்ணீருக்கான தட்டுப்பாடும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அது பற்றி எச்சரிக்கை விடுத்த ஐநாவுக்கான உணவு, விவசாய நிறுவனம் கடந்த காலங்களைப் போல சுமத்ராவில் காடு தீப்பிடித்து எரியும் நிலையும் காற்றில் மாசு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகும் துன்பமும் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இந்தப் பாதிப்பினால் பல மாநிலங்களில் நீண்ட காலத்திற்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதனைச் சமாளிக்க மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



