29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பேறு குறைந்த இரு மகன்களின் கால்களைக் கட்டிப்போட்ட தாய் கைது

🔥 Views : 9
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாயின் கொடுமை தாங்க முடியாமல் மூன்று சிறுவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி, பெர்லிஸ் கம்போங் தாம்புன் தூலாங்கில் உள்ள பாலத்திற்கு அடியில் அடைக்கலம் நாடியபோது, போலீசாரால் காப்பாற்றப்பட்டனர்.
14இல் இருந்து 16 வயதான அவர்கள் சகோதரர்கள் என்றும், இருவர் பேறு குறைந்தவர்கள் என்பதால், அவர்களின் தாயார் அவர்களின் கால்களைச் சங்கிலியால் கட்டியிருந்தது காணப்பட்டது. எஞ்சிய ஒரு சிறுவன் இயல்பான நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
சிறுவர்களின் குறும்பு, அடாவடித் தனத்தை பொறுக்க முடியாமல் அவர்களது தாயார் இருவரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளார். அந்த 46 வயது தாயார் அவர்களோடு வசிக்காமல், அந்த அராஜகத்தைப் புரிந்ததாகவும் அவருக்குத் தூண்டுதலாக அவரது 31 வயது காதலன் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்களிருவரும் கைது செய்யப்பட்டதோடு கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் துங்கு ஃபவுசியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles