
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூரில் கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதாகவும் ஆனால், அங்கு நடக்கும் வழிபாட்டிலும் சமயச் சடங்குகளிலும் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்தார்.
இந்நிலையில், முஸ்லிம்கள் இஸ்லாம் அல்லாத மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமென சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றமான ஜாயிஸ் வெளியிட்டிருக்கும் விதிமுறை சரியானதே என சுல்தான் ஷராஃபுடின் தற்காத்தார்.
சிலாங்கூர் சுல்தான் அளித்த அனுமதியைப் போன்றே ஜொகூர் சுல்தானும் ஒரே மாதிரியான விதிமுறையை வரையறுத்துள்ளது குறிப்பிடத்-தக்கது.



