
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலாக்காவில் நிகழ்ந்ததைப் போல் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கை ஜோகூர் உள்பட மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்படாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார்.
மலாக்காவில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழலுக்கும் மற்ற மாநிலங்களின் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அம்னோ தலைவருமான அவர் சொன்னார்.
.ஜோகூர் உள்பட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான ஆருடங்களை வெளியிட வேண்டாம். இது அரசியல் நிலைத்தன்மைக்கு குந்தகத்தை விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் விரும்புவது அரசியல் நிலைத்தன்மைதான். இதன் மூலம்தான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதற்கு நிலைத்தன்மை முக்கியமானதாக விளங்குகிறது என்றார் அவர்



