29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

எதிர்க்கட்சிகளின் வசமிருக்கும் மாநிலங்களை அரசு உதாசீனம் செய்கிறதா?

🔥 Views : 5
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

எதிர்க்கட்சிகளின் வசமிருக்கும் மாநிலங்கள் ஒற்றுமை அரசாங்கத்தினால் ஓரம் கட்டப்படுவதாகவும் போதுமான ஒதுக்கீட்டை வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படுவதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மை இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கம் அங்கீகரித்ததை விட 2023ஆம் ஆண்டுக்கு கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடாவுக்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்டிருப்பதை மறைத்து அரசின் மீது பொய்யான களங்கம் கற்பிக்கப்படுவதாக அன்வார் தெரிவித்தார்.
உண்மையைப் பேச வேண்டிய முஸ்லிம் உலாமாக்களே பொய் வதந்திகளைப் பரப்பி வருவது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஆனால், அவை உண்மையாக இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles