
🔊To listen to this news in Tamil, Please select the text.
இங்குள்ள பாசீர் பாஞ்சாங், கம்போங் பாரிட் 10 பான் கெனாலில் ராடசத மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாகப் பிடித்தனர்.
சுமார் 7 மீட்டர் நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒரு வீட்டின் அருகே நெல் வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலைப்பாம்பைக் கண்ட பொது மக்கள் நேற்றிரவு 10.38 மணியளவில் தங்களுக்கு தகவல் கொடுத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.
சிகிஞ்சான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 11 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் அந்த பாம்பை வெற்றிகரமாக பிடித்ததாக அவர் சொன்னார்.
அந்த பாம்பு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்



