
🔊To listen to this news in Tamil, Please select the text.
தரைப் போக்குவரவு ஆணையம் அறிவிப்பு வாடகைக் கார் மற்றும் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என வரையறை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இத்தகைய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 01-இல் பத்து ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று தரைப் போக்குவரவு ஆணையம்-‘அபாட்’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அனைத்து வாகனங்களும் ‘புஸ்பாகோம்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவுறுத்திய‘அபாட்’, சம்பந்தப்பட்ட வாகங்களின் ஓட்டுநர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் சேவையை இன்னும் மேம்படுத்திய வகையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.



