
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தரகு பணம் கேட்கும் போக்கு இன்னமும் தொடர்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். முந்தைய நிருவாகங்களின்கீழ் உருவான இந்த பழைய கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்படுவதற்கு சில காலம் ஆகலாம். கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான இந்த புதிய அரசின்கீழ், தன்னுடைய அலுவலகத்திலும் இன்னும் பிற அமைச்சகங்களிலும் ஒரு சில அதிகாரிகள் ‘commission’ கேட்பது தன்னுடைய பார்வைக்கு வருவதாக இன்று காலையில் நடைபெற்ற மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது பிரதமர் பேசினார். ஒரு சிறு தரப்பினர் மேற்கொண்டுவரும் இத்தகைய நடவடிக்கை அடியோடு ஒழிக்கப்படுவதற்கு சில காலம் ஆகலாம் என்று அவர் மேலும் சொன்னார்.



